Sunday, February 18, 2018

விசஸனம்-17

விசஸனம்: டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்

பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. 

இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

Wednesday, November 8, 2017

தெய்வ அருளை கெட்டதுக்கு பயன்படுத்தலாமா?

அசுர வீரர்களில் ஒருவன், வலன்; அளவற்ற சிறப்புகளையும், உயர்வையும் வேண்டி, சிவபெருமானை நோக்கி, கடும் தவம் செய்தான். 
அவன் தவத்தில் மகிழ்ந்து, அவனுக்கு காட்சியளித்தார், சிவபெருமான். 
சிவபெருமான் திருவடிகளில் விழுந்து வணங்கிய வலன், தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டு, வரம் வேண்டினான். 
அவன் வேண்டிய வரத்தை தந்து, அருளினார், சிவபெருமான். 
வரம் பெற்ற அகந்தையில், மனிதர்களை மட்டுமல்லாது, தேவர்களையும் ஆட்டிப் படைத்தான். அதேசமயம், தன் குலத்தவரான அசுரர்களுக்கு, குளிர்ந்த நீரைப் போல இருந்தான். 
வலனுடன் மோதி, வெல்லக் கூடியவர்கள் யாரும் இல்லாது போயினர். தேவர்கள் கூட, வலனிடம் போரிட்டு தோற்றனர். 

இதனால், அவனை வதம் செய்யும் நோக்கத்துடன், வலனைத் தேடி வந்த தேவேந்திரன், 'அசுர சிரேஷ்டனே... உன் ஆற்றல் என்னை வியக்க வைக்கிறது; உன் விருப்பத்தை நிறைவேற்றி, உனக்கு அருள் வழங்கவே வந்துள்ளேன்...' என்றார். 
அதைக் கேட்டு, இகழ்ச்சியாக சிரித்த வலன், 'தேவேந்திரா... உன்னை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை. அப்படியிருக்க, நீ, எனக்கு வரம் வழங்க வந்தாயா... மூடனே... உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்; நான் உனக்கு தருகிறேன்...' என்றான், ஆணவத்துடன்!

தன் எண்ணம் பலித்ததில், உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்த தேவேந்திரன், அதை வெளிக் காட்டாமல், ' நீ சொல்வதும் சரி தான்; உன்னைப் போன்ற மகா வீரர்களிடம் பெறக் கூடிய வரம் சாதாரணமாக இருக்கக் கூடாது. ஆகையால்...' என, தேவேந்திரன் பேசும் போதே இடைமறித்த வலன், 'தயங்க வேண்டாம்; என்ன வேண்டுமானாலும் கேள்; தருகிறேன்...' என்றான்.

'வலனே... நான் ஒரு யாகம் செய்யவிருக்கிறேன்; அந்த யாகத்தில், யாகப் பசுவாக நீ இருக்க வேண்டும்...' என்றார். வேறு வழியில்லாத நிலையில், அதற்கு இணங்கிய வலன், யாகத்தில் உயர் துறந்தான். 
இந்த வலனைப் போல் தான் நாமும், தெய்வ அருளால் நமக்கு கிடைக்கும் பொன், பொருளை வைத்து நல்லவிதமாக வாழாமல், ஆட்டம் போட்டு அடுத்தவர்களுக்கு தீங்கு செய்து, நம் முடிவை நாமே தேடிக் கொள்கிறோம்!